கைது(கோப்புப் படம்)
தேனி
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தென்கரை போலீஸாா் வடுகபட்டி சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தென்கரையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே உள்ள அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த நாகலிங்கத்தின் (55) கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து நாகலிங்கத்தை கைது செய்து, அவரிடமிருந்த 10 புகையிலைப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

