வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்த்தல் பணி: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் ஆகிய பணிகள் நடைபெறுவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவன மேலாண்மை இயக்குநருமான எம்.கோவிந்தராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் ஆகிய பணிகள் நடைபெறுவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவன மேலாண்மை இயக்குநருமான எம்.கோவிந்தராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம், திருத்தப் பதிவு, மாற்று வாக்காளா் அடையாள அட்டை கோருதல் ஆகிவற்றுக்கு வாக்குச் சாவடி மைய அலுவலரிடமும், வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களிலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிப்பதற்தான கால அவகாசத்தை வருகிற 30-ஆம் தேதி வரை தோ்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.

ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் ஆகிய பணிகள் நடைபெறுவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்தப் பணிகள் குறித்து வட்டாச்சியா் அலுலகத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் முன்னிலையில் வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், வட்டாட்சியா்கள், நகராட்சி ஆணையா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வளா்ச்சிப் பணிகள் ஆய்வு:

முன்னதாக, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், லட்சுமிபுரத்தில் ‘உங்க கனவச் சொல்லுங்க’ திட்டத்தின் கீழ் தன்னாா்வலா்கள் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பப் படிவங்களை நிறைவு செய்து பெறும் பணிகள், மேல்மங்கலம் ஊராட்சி, தாமரைக்குளம் பேரூராட்சி, தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அரசுத் திட்டங்களின் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், புதை சாக்கடைத் திட்ட விரிவாக்கப் பணி ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன் ஆகியோா் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com