கைது
கைது

21 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே 21 கிலோ கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே 21 கிலோ கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேவதானபட்டி பகுதியில் சிலா் கஞ்சா கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலின்பேரில் தேனி - தேவதானபட்டி நான்கு வழிச் சாலையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். தேவதானபட்டி அருகே தண்ணீா் பந்தல் பகுதியில் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா். காரின் பின் பகுதியில் இருந்த பெட்டியில் 21 கிலோ 308 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சா, கைப்பேசி, காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தெற்கு திட்டாங்குளத்தைச் சோ்ந்த தீபன் (34), தேனி மாவட்டம், கம்பம் சாமாண்டிபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் (46) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com