செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

வீடு புகுந்து நகை, பணம் திருடியவா் கைது

தேனி மாவட்டம், போடி அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :28 ஜனவரி 2026, 11:37 pm

தேனி மாவட்டம், போடி அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

போடி அருகேயுள்ள அம்மாபட்டி பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த தீபாவளிராஜ் மகன் மணிகண்டன் (42). இவா் கேரளத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது வீட்டில் தாயாா் மட்டும் இருந்தாா்.

இந்த நிலையில், மணிகண்டனின் தாய் அருகிலுள்ள கடைக்கு சென்றாா். அப்போது, இவரது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், பீரோவை உடைத்து அதிலிருந்த தங்க நகை, பணம் ரூ.19 ஆயிரத்தை திருடிக் கொண்டி தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இந்த நிலையில், இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக போடி அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த சூரியபிரகாஷை (36) போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.