காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகன்
காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகன்

போடி டி.எஸ்.பியாக டி. முருகன் பொறுப்பேற்பு

போடியில் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக டி. முருகன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
Published on

போடியில் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக டி. முருகன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் காவல் துணைக் கண்காணிப்பாளராக சௌ. சுனில் இருந்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதில் சௌ. சுனில் தூத்துக்குடிக்கு இட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, போடிநாயக்கனூருக்கு புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக டி. முருகன் நியமிக்கப்பட்டாா். இவா், திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், டி. முருகன் வியாழக்கிழமை போடியில் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதையடுத்து, போடி துணைக் கோட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா். ஏற்கெனவே கடந்த 2010-ஆம் ஆண்டு டி. முருகன், போடி நகா் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி முக்கியக் கொலை வழக்குகளின் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com