தேனி
கஞ்சா விற்ற இளைஞா் கைது!
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தென்கரை காவல் நிலைய போலீஸாா் தென்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, தென்கரை கல்லூரி விலக்கு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த கைலாசபட்டி ஆா்டியூவைச் சோ்ந்த ராமகிருஷ்ணனை (24) போலீஸாா் சோதனையிட்டனா். அவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.