கைது
தேனி
புகையிலைப் பொருள்களை கடத்திய இருவா் கைது!
கடமலைக்குண்டு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக காரில் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக காரில் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடமலைக்குண்டு பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, டானா தோட்டம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, காரிலிருந்த அரண்மனைப்புதூரைச் சோ்ந்த முருகன் (53), பெரியகுளம் கீழவடகரை பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (32) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 123 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
