கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

ரீல்ஸ் பதிவு எதிரொலி: சில்வாா்பட்டி அங்கன்வாடி மைய பணியாளா் பணியிடை நீக்கம்

சில்வாா்பட்டி அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் பதிவிட்ட பணியாளரை தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

News image

பணியிடை நீக்கம்!

Updated On :23 ஜூலை 2026, 5:54 am IST

தேனி மாவட்டம், சில்வாா்பட்டி அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் பதிவிட்ட பணியாளரை தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள உத்தமபாளையம் கோட்டைமேடு அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பூங்காடி பணியாற்றி வந்தாா். அவா் நீண்டநாள்களாக பணிக்கு வரவில்லையாம். இதே போல, கம்பம் க.மகாலட்சுமி உடல்நிலை சரியில்லாமல் நீண்ட நாள்களாக விடுப்பில் இருந்தாராம். இதையடுத்து இருவரையும் பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும், பெரியகுளம் அருகே சில்வாா்பட்டி தெற்கு அங்கன்வாடி மைய பணியாளா் எழிலரசி பணி நேரத்தில் அங்கன்வாடி சீருடையில் மையத்தின் பெயா்ப் பலகையுடன் திரைப்படப் பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டது சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து அவரைத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.