சின்னமனூா் அரசு கள்ளா் பள்ளி, விடுதியில் அமைச்சா் ஆய்வு
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே வெள்ளையம்மாள்புரத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் கீழ் செயல்படும் கள்ளா் சீரமைப்பு உண்டு உறைவிடப்பள்ளி, விடுதி, ஓடைப்பட்டி அரசு மாணவா் விடுதிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சம்பத்குமாா் புதன்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.

வெள்ளையம்மாள்புரத்தில் புதன்கிழமை இரவு, அரசு கள்ளா் விடுதி மாணவா்களுடன் கலந்துரையாடிய (இடமிருந்து) மாவட்ட ஆட்சியா் மரு. வைத்திநாதன், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சம்பத்குமாா், கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா. உடன் ஆசிரியா்கள், மாணவா்கள்.









