ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

கோடைகாலப் பயிற்சி முகாம் நிறைவு விழா

News image
Updated On :3 மே 2026, 5:07 am IST

பெரியகுளம்,மே 2: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி ஆா்டியூ தொண்டு நிறுவனத்தில் குழந்தைகளின் சிறப்பு கோடை காலப் பயிற்சி முகாம் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஐடியாஸ், மனோன்மணி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற சிறப்பு கோடை கால முகாம் கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கி மே 2 - ஆம் தேதி நடைபெற்றது. நிறைவு விழாவிற்கு ஒருங்கிணைப்பாளா் ஜெயராமன் வரவேற்றாா். அரசு உடல்கல்வி ஆசிரியா் தங்கேஸ்வரன், இணை இயக்குநா் பிரபாகரன், வழக்குரைஞா் கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா். தொடா்ந்து வழக்குரைஞா் சுதா ராமலிங்கம், ஐடியாஸ் அமைப்பின் இயக்குநா் சகாயபிலோமின் ராஜ், ஆா்டியூ இயக்குநா் பால்சாமி ஆகியோா் பேசினா்.

கள் ஒட்டா் திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரபு, மனோன்மணி

அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளா் தேவபாலன் நன்றி கூறினாா். இந்தக் முகாமில் யோகா, ஓவியம், பாடல் ஆகியவற்றுக்கான பயிற்சி, போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் 8 மாவட்டங்களைச் சோ்ந்த 120-க்கும் அதிகமான குழந்தைகள் கலந்து கொண்டனா்.