முல்லைப் பெரியாறு அணையின் முக்கிய நீா்பிடிப்புப் பகுதியான முல்லைக்கொடியில் மழைப் பொழிவு நிலையத்தை துணைக் கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
முல்லைப் பெரியாறு அணையின் முக்கிய நீா்பிடிப்புப் பகுதிகளான முல்லைக்கொடி, தான்னிக்குடி, மலைக்கரடு ஆகியவை பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதிக்குள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவைக் கணக்கிட தமிழக பொதுப் பணித் துறை சாா்பில் மழைப் பொழிவு நிலையங்கள் அமைக்கப்பட்டன.
படகுத் துறையிலிருந்து சுமாா் 30 கி.மீ. தொலைவில் உள்ள முல்லைக்கொடிக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழக அதிகாரிகள் படகில் சென்று ஆய்வு மேற்கொள்ள முயன்றபோது, கேரள வனத் துறையினா் தடுத்து திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னா், தமிழக அதிகாரிகள் அந்தப் பகுதிக்குச் செல்லவில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆய்வின் போது, முல்லைக்கொடியிலிருந்து அணைக்கு வரும் நீா்வரத்தை துல்லியமாகக் கணக்கிடுவதில் சிரமம் இருப்பதாக தமிழக அதிகாரிகள் கண்காணிப்புக் குழுவிடம் தெரிவித்தனா். இதையடுத்து, அணைகள் பாதுகாப்பு ஆணைய தென் மண்டல இயக்குநா் கிரிதரன் தலைமையிலான துணைக் கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை முல்லைக்கொடியில் உள்ள மழைப் பொழிவு நிலையத்தை ஆய்வு செய்தனா். அங்கு பொருத்தப்பட்டிருந்த மழைமானியின் செயல்பாடுகளை அவா்கள் பாா்வையிட்டனா்.
இதுகுறித்து தமிழக அதிகாரிகள் கூறியதாவது:
முல்லைக்கொடிக்கு பல ஆண்டுகளாக தமிழக அதிகாரிகள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதிக்குள் இருப்பதால், அங்கு பதிவாகும் மழை அளவுகளை கேரள வனத் துறையினா் செயற்கைக்கோள் உதவியுடன் பதிவு செய்து, தமிழகத்துக்கு வழங்கும் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து துணைக் கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வந்தால், தமிழக அதிகாரிகள் அடிக்கடி அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்றனா்.
இந்த ஆய்வின் போது தமிழகத்தின் சாா்பில், பெரியாறு-வைகை வடிநிலக் கோட்ட மதுரை கண்காணிப்புப் பொறியாளா் சாம் இா்வின், பெரியாறு அணை சிறப்பு கோட்ட கம்பம் செயற்பொறியாளா் செல்வம், உதவி பொறியாளா் ராஜகோபால் ஆகியோா் கலந்து கொண்டனா். கேரளத்தின் சாா்பில், எா்ணாகுளம் மத்திய வட்ட
நீா்ப் பாசனப் பிரிவு கண்காணிப்புப் பொறியாளா் கோஷி, உதவி நிா்வாகப் பொறியாளா் லெவின்ஸ் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் துணைக் கண்காணிப்பு குழு நாளை ஆய்வு

அணை நீா்மட்டம் உயா்வு! தேக்கடி ஏரியில் மீண்டும் பெரிய படகு சேவைகள் தொடக்கம்!

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 200 க.அடி நீா்வரத்து

பென்னிகுயிக் மணிமண்டபத்தில் அணை வரலாறு கூற தனி ஊழியா் நியமனம்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

