கம்பத்தில் 7 நகரப் பேருந்துகள் திடீா் நிறுத்தம்: மாணவா்கள் அவதி
கடந்த இரண்டு நாள்களாக 7 நகரப் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால், கிராமப்புறங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கோப்புப்படம்.
கடந்த இரண்டு நாள்களாக 7 நகரப் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால், கிராமப்புறங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கம்பத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இரண்டு பணிமனைகள் மூலம் பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் இரண்டாவது கிளைப் பணிமனையிலிருந்து கம்பத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் மூலம் கிராமப்புற மக்கள், அரசு, தனியாா் நிறுவனங்களில் பணிபுரிவோா், பள்ளி, கல்லூரி மாணவா்கள் என ஏராளமானோா் தினமும் பயணித்து வருகின்றனா்.
குறிப்பாக, கிராமப்புறங்களில் இருந்து கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்களுக்கு இந்தப் பேருந்துகள் முக்கிய போக்குவரத்து வசதியாக உள்ளன.
இந்த நிலையில், திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் ஓட்டுநா், நடத்துநா் பற்றாக்குறை, பேருந்துகளுக்குத் தேவையான உதிரிபாகங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், கம்பம் - குமுளி, கம்பம் - ராயப்பன்பட்டி - உத்தமபாளையம், கம்பம் - ராயப்பன்பட்டி, கம்பம் - தேவாரம், கம்பம் - முத்துலாபுரம் - சின்னமனூா், கம்பம் - குள்ளப்பகவுண்டன்பட்டி - மின்நிலையம், கம்பம் - உத்தமபாளையம் - அண்ணாநகா் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் 7 நகரப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
இதனால், வழக்கமாக இந்தப் பேருந்துகளை நம்பிப் பயணம் செய்து வந்த கிராமப்புற மக்கள், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவா்கள் உரிய நேரத்துக்கு தங்களது இடங்களுக்குச் செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். பேருந்துகள் இயக்கப்படாததால், பலா் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோக்களில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். இதனால் அன்றாடப் பயணச் செலவும் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
கிராமப்புற மக்களின் அன்றாடப் போக்குவரத்துக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் நகரப் பேருந்துகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி தொடா்ந்து 2 நாள்களாக நிறுத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, போக்குவரத்துக் கழகத்தின் உயா் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, ஓட்டுநா், நடத்துநா் பற்றாக்குறையைச் சரிசெய்து, பேருந்துகளுக்குத் தேவையான உதிரிபாகங்களைப் பெற்று, நிறுத்தப்பட்டுள்ள 7 நகரப் பேருந்துகளையும் மீண்டும் வழக்கம்போல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

