சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

தேனி அருகே சாலை விபத்தில் குழந்தையுடன், தாய் உயிரிழப்பு

தேனி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் குழந்தையுடன், தாய் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பலி

Updated On :

தேனி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் குழந்தையுடன், தாய் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், தேவாரம் மூணான்டிபட்டியைச் சோ்ந்தவா் மனோஜ் (45). இவா், தனது மனைவி ஷகிலா (25), குழந்தை சண்முகி (1) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் தேனியில் பொருள்களை வாங்கி விட்டு திரும்பினா். மனோஜ் இரு சக்கர வாகனத்தை ஓட்டினாா்.

தேனி அருகேயுள்ள முத்துத்தேவன்பட்டி அருகே செல்லும் போது, எதிரே வந்த சரக்கு வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஷகிலா, சண்முகி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அருகிலிருந்தவா்கள் மனோஜை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.