சிவகாசி, அக். 6: : சுற்றுச்சூழலைப் பாதிக்காத காகித கப் தயாரிப்புத் தொழில் மேம்பட மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைப்புத் தந்தால், மேலும் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது என சிவகாசி காகித கப் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிவகாசியில் 40 மி. லிட்டர் முதல் 50, 85, 100, 150, 170, 210, 250, 300 மி. லிட்டர் வரை அளவிலான காகிதக் கப்புகள் தயாரிக்கப்படுகின்றன. சென்னைப் பகுதியில் டீக்கடைகளில் 100 மி. லிட்டர் அளவு கப்புகளும், தென் மாவட்டங்களில் உள்ள டீக்கடைகளில் 110 மி. லிட்டர் அளவு உள்ள காகிதக் கப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன.
திருமண விழாக்களில் 150 மி. லிட்டர் கப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கப்புகள் 40 முதல் 50 டிகிரி சூட்டைத் தாங்கக் கூடியவை.
வெயில் காலங்களில் குளிர்பானங்களுக்கு 210 மி. லிட்டர் கப்புகள் மற்றும் 250 மி. லிட்டர் கப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் சிவகாசி, சேலம், ஈரோடு, கரூர் ஆகிய நகரங்களில் இந்த வகை கப்புகள் தயாரிக்கப்படுகின்றன.
சிவகாசியில் 30 ஆலைகள் உள்ளன. ஆண்டுக்கு சுமார் ரூ. 30 கோடி அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது. தமிழக அளவில் ஆண்டுக்கு சுமார் ரூ. 100 கோடி அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது.
சிவகாசியில் காகிதக் கப் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜி. ராஜ்குமார் கூறியதாவது:
பிளாஸ்டிக் கப்புகளுக்கு தடை என அரசு உத்தரவு இருந்தாலும், அது முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. கொடைக்கானல், ஊட்டி, பாபநாசம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பாலித்தீன் பைகள் உபயோகப்படுத்தக் கூடாது என்ற தடை இருந்தாலும், முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை.
டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் கப்புகளையே பயன்படுத்துகிறார்கள்.
தமிழக அரசு இதைத் தடை செய்து, சுற்றுச்சூழலைப் பாதிக்காத காகிதக் கப்புகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்தால், இந்தத் தொழில் மேலும் வளர்ச்சி அடையும். இந்திய அளவில் ரயில்வே துறை கப்புகளை அதிகமாகப் பயன்படுத்துகிறது. ரயில்வே துறை, ரயில்களில் உணவு பொருள்கள் தயாரிப்பவரிடமே கப்புகளை வாங்கும் பொறுப்பை ஒப்படைத்து விடுகிறது. அவர்கள் அந்தந்தப் பகுதியில் விலை குறைவான கப்புகளை வாங்குகிறார்கள். அதற்குப் பதிலாக ரயில்வே துறையே நேரடியாகத் தயாரிப்பாளர்களிடம் தரம் பார்த்து வாங்க வேண்டும். இதனால் இந்தத் தொழில் இந்திய அளவில் வளர்ச்சி பெறும் வாய்ப்பு உள்ளது. சீனாவில் இரண்டு அடுக்கு காகிதக் கப்புகள் வந்துவிட்டன. நாளுக்கு நாள் இதன் தேவை அதிகரித்துக் கொண்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயமாகும்.
எதிர்காலத்தில் கைப்பிடியுள்ள காகிதக் கப்புகள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். பொதுமக்கள், அரசு ஒத்துழைப்புத் தந்தால் இந்தத் தொழில் நல்ல வளர்ச்சி அடையும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

