யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரியில் வளாக நேர்காணல்: 11 பேர் தேர்வு

திருச்சியில் உள்ள ஆரேவின் டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.எஸ்.ஆல்வின் ஜெரின் ஜோ மற்றும் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரி ஸ்டேன்லி ஆகியோர்

News image
Updated On :8 ஏப்ரல் 2013, 2:06 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற வளாக நேர்காணலில் இறுதியாண்டு படிக்கும் 11 மாணவியர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

திருச்சியில் உள்ள ஆரேவின் டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.எஸ்.ஆல்வின் ஜெரின் ஜோ மற்றும் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரி ஸ்டேன்லி ஆகியோர் இந்த வளாக நேர்காணலை நடத்தினர். இதில் இக் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் 145 மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு எழுத்துத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டது.

இறுதியாக கணினி அறிவியல் மாணவிகள் எம்.செல்வபாரதி, என்.விஜயசாந்தி, ஐ.டி. மாணவி ஜே.மணிமேகலை, இ.இ.இ. மாணவி எஸ்.என்.நந்தினி, இ.சி.இ. மாணவிகள் எஸ்.டி.ரேஷ்னிபாலு, கே.ரம்யா, ஆர்.பி.அமிர்தா, ஆர்.எஸ்.ரசினா ரின், என்.தீபிகா, ஐ.லூர்து மல்லிகா, கே.கல்பனா ஆகியோர் தேர்வு பெற்றனர். இவர்களுக்கு பணி நியமன் உத்தரவுகளை கல்லூரியின் தாளாளர் பழனிச்செல்வி முன்னிலையில், கல்வி நிறுவனத் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் வழங்கி பாராட்டினார்.

அப்போது உடன் முதல்வர் கணேசன், இயக்குநர் ராதிகா, வேலைவாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் ஜெயராதிகா, மகாராசி, ஆனந்தக்கனி, வீரகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.