யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வி.பி.எம்.எம். கல்லூரி மாணவிக்கு பல்கலை. அளவில் சிறந்த என்.எஸ்.எஸ். மாணவிக்கான விருது

மதுரை காமராஜர் பல்கலைக்கழக அளவில் 2013-ம் ஆண்டிற்கான சிறந்த என்.எஸ்.எஸ். மாணவிக்கான விருது, விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி இ.ஐஸ்வர்யாவிற்கு கிடைத்துள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2013, 1:03 pm

கோ.ஜெயக்குமார்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக அளவில் 2013-ம் ஆண்டிற்கான சிறந்த என்.எஸ்.எஸ். மாணவிக்கான விருது, விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி இ.ஐஸ்வர்யாவிற்கு கிடைத்துள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக அளவில் சிறந்த என்.எஸ்.எஸ். மாணவிக்கான விருதை இம் மாதம் 8-ம் தேதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் துணை வேந்தர் கல்யாணி மதிவாணன் வழங்கி கௌரவித்தார்.

மாணவிகள் நாட்டு நலப் பணித் திட்டத்தில் சேர்ந்து எந்தெந்த வகையில் சேவை செய்துள்ளார்கள் என்பதனை அளவிட்டு அவர்களுக்கு பல்கலைக்கழக அளவில் இந்த விருது வழங்கப்படுகிறது.

விருது பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவியையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஐ.முத்துலட்சுமி, கே.உமா, ஜி.அமுதா ஆகியோரையும் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர், துணைத் தலைவர் வி.பி.எம்.எஸ்.தங்கபிரபு, தாளாளர் பழனிச்செல்வி, முதல்வர் சரவணன், துணை முதல்வர் செந்தாமரைலட்சுமி மற்றும் வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.