ஆசிரியர்களுக்கு கைவினைப் பொருள் தயாரிப்பு பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வத்திராயிருப்பு வட்டார வள மையத்திற்குட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கலை மற்றும் கைவினைப் பொருள்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது
Updated on
1 min read

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வத்திராயிருப்பு வட்டார வள மையத்திற்குட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கலை மற்றும் கைவினைப் பொருள்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

   பயிற்சியில் பாடப் பொருளுக்கு ஏற்ப படம் வரைதல், பொம்மலாட்ட பொம்மைகள் மற்றும் முகமூடிகள் தயாரித்தல், இலைகளை வைத்து உருவங்கள் அமைத்தல், காகித உருவங்கள், பாடப் பகுதியில் உள்ள பாடல்களை இசையுடன் பாடுதல், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் மற்றும் கொடிப்பாடலை எவ்வாறு பாடுவது, படங்களை எவ்வாறு எளிமையாக வரைவது, அச்சு மை கொண்டு உருவங்கள் அமைத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற்றன.

   கருத்தாளர்களாக ஆசிரியப் பயிற்றுநர்களும், பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் செயல்பட்டனர். இப்பயிற்சியில் 344 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு. ஜெயலட்சுமி தலைமையில் ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com