நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தம்பதிக்கு அரிவாள் வெட்டு: 3 பெண்கள் கைது

: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்விரோதத்தில் நடைபெற்ற மோதலில் ஞாயிற்றுக்கிழமை மாலை கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக 3 பெண்களை கைது செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகிறார்கள்.

Updated On :13 மே 2013, 12:16 am IST

: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்விரோதத்தில் நடைபெற்ற மோதலில் ஞாயிற்றுக்கிழமை மாலை கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக 3 பெண்களை கைது செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகிறார்கள்.

   ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சல்லிபட்டி, சிவந்தியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா மகன் முனிப்பாண்டி (30). இவரது மனைவி முத்துநாச்சியார் (28). கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இரவு முத்துநாச்சியார் வீட்டுக்கு, இதே ஊரைச் சேர்ந்த செல்லச்சாமி மகன் கருப்பசாமி சென்றுள்ளார்.

   அப்போது வீட்டில் முனிப்பாண்டியும் இருந்துள்ளார். கருப்பசாமி மற்றும் தனது மனைவி மீது சந்தேகமுற்ற முனிப்பாண்டி பிரச்னை செய்துள்ளார். இதனையடுத்து கடந்த இரு மாதங்களாக கருப்பசாமி வெளியூர் சென்று விட்டார். ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஊருக்கு வந்துள்ளார்.

   அப்போது கருப்பசாமி அவரது உறவினர்கள் செல்லத்துரை, மகாலட்சுமி, முருகன், சிவகாமி, பசுபதி மற்றும் மகாலட்சுமி ஆகிய 7 பேரும் சேர்ந்து முனிப்பாண்டி வீட்டுக்குச் சென்று நடந்த சம்பவம் குறித்து கேட்டு பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர்.

   இதில் ஏற்பட்ட மோதலில் முத்துநாச்சியார் மற்றும் முனிப்பாண்டிக்கு பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

   சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பெண்கள் மூவரையும் கைது செய்தனர். மேலும் கருப்பசாமி, செல்லத்துரை, முருகன், பசுபதி ஆகியோரைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.