நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

இயந்திரம் மூலம் நாற்று நடவுக்கு விவசாயிகளுக்கு மானியம்

விருதுநகர் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் இயந்திரம் மூலம் நெற்பயிரிடும் பணியை மேற்கொள்வதற்கு 4900 ஹெக்டேர் வரையில் விவசாயிகளுக்கு மானியம் அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எஸ்.கனகராஜன்  தெரிவித்தார்.

Updated On :

விருதுநகர் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் இயந்திரம் மூலம் நெற்பயிரிடும் பணியை மேற்கொள்வதற்கு 4900 ஹெக்டேர் வரையில் விவசாயிகளுக்கு மானியம் அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எஸ்.கனகராஜன்  தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் பணியை ஊக்குவிப்பதற்காக விவசாயிகளுக்கு அரசு பல்வேறு மானியத் திட்டங்களை வழங்கி வருகிறது. நெல் நடவின்போது ஏற்படும் ஆள்கள் பற்றாக்குறையை தவிர்க்கவும், நவீன சாகுபடி உத்திகளை பயன்படுத்தும் வகையிலும் இயந்திரம் மூலம் நடவு மேற்கொள்ள விவசாயிகளுக்கு அரசு மானியம் அளிக்கிறது.

ஒரு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வரையில் மானியம் அளிக்கப்படுகிறது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 4900 ஹெக்டேருக்கு வழங்கப்பட இருக்கிறது. இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்வதால் சாகுபடி செலவு குறைவதுடன், நடவுப்பணியும் துரிதமாக மேற்கொள்ள முடியும்.

 மேலும், 10 ஆண்டுகளுக்குள்பட்ட சான்று பெற்ற விதைகளுக்கு விநியோக மானியமாக ரூ.10ம், உயர் விளைச்சல் தரும் சான்று பெற்ற நெல் விதைகளை உற்பத்தி செய்வதற்கு, உற்பத்தி மானியமாக ரூ.5ம் வழங்கப்படுகிறது. இச்சலுகைகளை பெற விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம் என அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.