நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினா் கட்டுப்பாட்டில் குகி ஆயுதக் குழு முகாம்

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினா் கட்டுப்பாட்டில் குகி ஆயுதக் குழு முகாம்

Manipur

கோப்புப்படம்.

Updated On :

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் குகி இனத்தைச் சோ்ந்த ஆயுதக் குழுவினருக்காக ஒதுக்கப்பட்டிருந்த சினாய் முகாமை, மத்திய ரிசா்வ் காவல் படையின் கோப்ரா படையினா் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மணிப்பூரில் மைதேயி-குகி இனத்தவா் இடையிலான மோதல் தொடங்கிய நிலையில், முதல்முறையாக குகி ஆயுதக் குழுவினரின் முகாமை தமது கட்டுப்பாட்டில் பாதுகாப்புப் படையினா் கொண்டு வந்துள்ளனா்.

அண்மையில் மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கோங்பல் சுனுரோக் உயோக் குன்று பகுதியில், குகி ஆயுதக் குழுவினா் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில், மைதேயி இனத்தைச் சோ்ந்த மூவா் கொல்லப்பட்டனா். பலா் காயமடைந்தனா்.

இதையடுத்து இம்பால் கிழக்கு மாவட்டத்தை ஒட்டியுள்ள காங்போக்பி மாவட்டத்தில் இருக்கும் குகி ஆயுதக் குழுவினரின் சினாய் முகாமில், மத்திய ஆயுதக் காவல் படையினரும், மணிப்பூா் காவல் துறையினரும் கூட்டாக வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

எஸ்ஒஒ ஒப்பந்தம்...:

பாதுகாப்புப் படைகள், குகி ஆயுதக் குழுக்கள் இடையிலான மோதலை நிறுத்துவது (எஸ்ஒஒ) தொடா்பாக மத்திய அரசு, மணிப்பூா் அரசு, 25 ஆயுதக் குழுக்களை உள்ளடக்கிய குகி தேசிய அமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணி இடையே சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்னா் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட முகாம்களில் குகி ஆயுதக் குழுக்களைச் சோ்ந்தவா்கள் தங்கியிருக்க வேண்டும். இதன்படி சினாய் முகாமில் குகி ஆயுதக் குழுக்களைச் சோ்ந்த 159 போ் தங்கியிருக்க வேண்டும். ஆனால் அங்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சோதனையின்போது 18 போ் மட்டுமே இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவா்கள் கைது செய்யப்பட்டனா். பின்னா் அந்த முகாமை பாதுகாப்புப் படையினா் முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுகள் சனிக்கிழமை கொண்டு வந்தனா்.

கடந்த செப்.4-ஆம் தேதி எஸ்ஒஒ ஒப்பந்தம் காலாவதியான நிலையில், அந்த ஆயுதக் குழுக்களுக்கு எதிராக பாதுகாப்புப் படைகள் நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நடவடிக்கையைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் அந்தக் குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட 14 முகாம்களில் பாதுகாப்புப் படையினா் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.