வளாக நேர்காணல்: 9 பேருக்கு பணி நியமன உத்தரவு
கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நேர்காணலில் 9 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நேர்காணலில் 9 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
இக் கல்லூரியில் சென்னை டெக் மஹிந்திரா நிறுவனம் வளாக நேர்காணல் நடத்தியது. நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் தீமோத்தேயு சாம்சன், சந்தோஷ் மற்றும் தொழில் நுட்ப அதிகாரி உமா மகேஸ்வரி ஆகியோர் திறனறி ஆன்லைன் தேர்வு, டெக்னிக்கல் நேர்காணல் உள்ளிட்ட தேர்வுகளை நடத்தினர். இதில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கலசலிங்கம் பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர் எஸ்.சசிஆனந்த் முன்னிலையில் வேந்தர் முனைவர் க.ஸ்ரீதரன் பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் எஸ்.செல்வமணி, வேலைவாய்ப்பு அலுவலர் எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




