முதியோர் உதவித் தொகை கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
சிவகாசியில் முதியோர் உதவித்தொகை வழங்கக் கோரி, வட்டாட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு பயனாளிகள் போராட்டம் நடத்தினர்.


சிவகாசியில் முதியோர் உதவித்தொகை வழங்கக் கோரி, வட்டாட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு பயனாளிகள் போராட்டம் நடத்தினர்.
சிவகாசி வட்டம், அதிவீரம்பட்டியில் 2013 ஆம் ஆண்டு பெண்கள் 13 பேருக்கும், ஆண்கள் 5 பேருக்கும் முதியோர் உதவித் தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரை பயனாளிகளுக்கு உதவித் தொகை கிடைக்கவில்லையாம்.
இது சம்பந்தமாக பலமுறை வருவாய்த் துறைக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். எனவே, அந்த பயனாளிகள் 18 பேரும் சிவகாசி வட்டாட்சியர் அலுவலகம் வாயில் அருகே அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து வந்த சிவகாசி வட்டாட்சியர் ஸ்ரீதர், விரைவில் முதியோர் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதையடுத்து, அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.
இப்போராட்டம் காலை சுமார் 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...