தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

"ஜெர்மனி பொறியியல் நிறுவனங்களில் 80 ஆயிரம் வேலை வாய்ப்புகள்'

ஜெர்மனி பொறியியல் நிறுவனங்களில் சுமார் 80 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உள்ளன என அந்நாட்டின் நிறுவன அதிகாரி கூறினார்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 12:27 am

DIN

ஜெர்மனி பொறியியல் நிறுவனங்களில் சுமார் 80 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உள்ளன என அந்நாட்டின் நிறுவன அதிகாரி கூறினார்.
சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை தாளாளர் ஏ.டென்சிங் தலைமையில், மெப்கோ இ-லேர்னிங்
சென்டர் என்ற மின்கல்வி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் மையத்தை ஜெர்மனி நாட்டின் கார்ல் ஸ்லாங்க் ஏஜி நிறுவனத்தின்  முதன்மை செயல் அதிகாரி கார்ல்வான் குண்டெர் ஸ்லாங்க் திறந்து வைத்து, ஜெர்மனியில் உயர் கல்வி வாய்புக்கள் என்ற தலைப்பில் பேசியதாவது: உயர் கல்வி கற்க ஜெர்மனியில் கல்விக் கட்டணம் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது குறைவாக உள்ளது.
சர்வதேச புகழ்பெற்ற பல்கலைகழகங்கள் அங்கு உள்ளன. அதில் மிகத்தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது. கற்பிக்கும் பேராசிரியர்கள் அனைவரும் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். பாடத்திட்டங்கள், கல்வி பயிற்றுவிக்கும் முறை, தேர்வுகள் அனைத்தும் மாணவர்களின் திறமையை வளர்கும் விதமாக உள்ளது. வகுப்பறை பாடங்களுடன் மாணவர்களுக்கு ஆய்வு கூடங்களில் பயிற்சியும், தொழிற்சாலைகளில் பயிற்சியும் அளிக்கப்படுவதால் மாணவர்கள் சிறப்பாக கற்றுத் வருகிறார்கள். மாணவர்களின் தனித்திறமையை கண்டறித்து, அவர்களை மேலும் திறமையுள்ளவர்களாக ஆக்கப்படுவர். இதன்மூலம் அவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதோடு, வாழும் முறைகளையும் கற்றுக்கொள்கிறார்கள்.துறை சார்ந்த பல்வேறு ஆராய்சிகள் செய்ய வசதியும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. தற்போது ஜெர்மனியில் பொறியியல் நிறுவனங்களில் சுமார் 80 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்திய மாணவர்கள் இந்த வேலைவாய்ப்பினை பயன்டுத்திக்கொள்ள வேண்டும். ஜெர்மனியில் உயர்கல்வி பயிலும் அயல்நாட்டு மாணவர்களில் இந்திய மாணர்கள் இரண்டாமிடம் பெற்றுள்ளனர் என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் எஸ்.அறிவழகன் வரவேற்றார். பேராசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.