ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மின் அலுவலகங்களில் குறைந்த விலையில் எல்.இ.டி. பல்பு உள்ளிட்ட மின்சாதனங்கள் விற்பனை

மத்திய அரசின் உஜாலா திட்டத்தின் கீழ், மின் அலுவலகங்களில் குறைந்த விலையில் எல்.இ.டி. பல்புகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:27 pm

DIN

மத்திய அரசின் உஜாலா திட்டத்தின் கீழ், மின் அலுவலகங்களில் குறைந்த விலையில் எல்.இ.டி. பல்புகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
      ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை விற்பனையைத் தொடக்கி வைத்து, நகர் மேற்கு இளநிலை மின்பொறியாளர் டி. முருகன் கூறியதாவது:
     மத்திய அரசின் உஜாலா திட்டத்தில், மின் அலுவலகங்களில் மிகக் குறைந்த விலையில் அதிகத் தரம் வாய்ந்த எல்.இ.டி. பல்புகள் விற்பனைக்கு வந்துள்ளன. ரூ.70-க்கு விற்கப்படும் இந்த பல்புகளுக்கு 3 ஆண்டுகள் உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. அதேபோல், டியூப் லைட் ரூ. 220-க்கு இரண்டரை ஆண்டு உத்தரவாதத்திலும், மின் விசிறி ரூ.1200-க்கு இரண்டரை ஆண்டு சேவை உத்தரவாதத்துடன் (சர்வீஸ் வாரன்ட்டி) நாடு முழுவதும் விற்பனைக்கு வந்துள்ளது.  
     மின்சாதனங்களை வாங்க வருவோர், தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்து, பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். மாவட்டத்தில் சிவகாசி, சித்துராஜபுரம், திருத்தங்கல், ராஜபாளையம் பொன்னகரம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் கோட்டைப்பட்டி, சாத்தூர் நகர், விருதுநகர் நகர், அருப்புக்கோட்டை நகர், காரியாபட்டி, திருச்சுழி ஆகிய மின் அலுவலங்களில் பெற்றுக் கொள்ளலாம். வாடிக்கையாளர் சேவை செல்லிடப்பேசி எண் 86102-68341 எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.