விருதுநகரில் எஸ்.சி., எஸ்.டி., வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் பாண்டியன் கிராம தலைமை அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வங்கியில் பணி புரியும் எஸ்சி. எஸ்டி சங்கம் சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

விருதுநகர் பாண்டியன் கிராம தலைமை அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வங்கியில் பணி புரியும் எஸ்சி. எஸ்டி சங்கம் சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 இதற்கு பாண்டியன் கிராம வங்கியின் எஸ்சி எஸ்டி சங்கத்தின் பொதுச் செயலர் முத்துராஜ் தலைமை வகித்தார்.  ஜாதி பாகுபட்டுடன் கூடிய மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கடைநிலை ஊழியர்கள் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முன்னேற்ற கழக நிறுவனர் ஜான் பாண்டியன் கூறுகையில், எஸ்சி, எஸ்டி ஊழியர்களுக்கு எதிராக செயல்படும் வங்கி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இந்த வங்கியில் பணி புரியும் பெண் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத இடத்திற்கு இட மாறுதல் வழங்கியுள்ளனர். அதே போல், தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகளை வழங்க மறுக்கின்றனர். கோவையில் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு மேற்கொண்ட தமிழக ஆளுனரின் செயல் கண்டிக்கதக்கது. மாநில நிர்வாகத்தின் செயல்பாடுகளில் தலையிடுவது ஏற்புடையதல்ல என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com