விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க மிதிவண்டி பேரணி இன்று தொடங்கி 3 நாள்கள் நடக்கிறது.
தமிழகத்தில் 4 ஆம் கட்டமாக விருநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஆக. 31) முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை இப்பேரணி நடக்கிறது.
இதையொட்டி சாத்தூரில் வெள்ளிக்கிழமை (ஆக.31) ஹரி மஹாலில் தொடங்கி சாத்தூர், அமீர்பாளையம், பிரதான சாலை, வெம்பக்கோட்டை சாலை, ஒ.மேட்டுபட்டி, ஒத்தையால், ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, ஆலங்குளம், சத்திரபட்டி வழியாக இரவு ராஜபாளையம் சென்றடைகிறது. சனிக்கிழமை (செப்.1) ராஜபாளையத்திலிருந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக சிவகாசி சென்றடைகிறது. ஞாயிற்றுகிழமை (செப்.2) சிவகாசியிலிருந்து, விருதுநகர், அருப்புக்கோட்டை வழியாக காரியாபட்டியில் நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட அதிமுகவினர் செய்து வருகின்றனர். இதில் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உக்ரைனில் ஆலையைச் சீரமைக்கும் பணியில் ஆர்சிலர் மிட்டல்!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 17 - நேரலை!

இளைஞர்கள் வாக்களித்த ஆட்சி; ஆனால், அவர்களின் எதிர்காலம்? - பிரேமலதா பதில்!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |


