சிவகாசி, கிருஷ்ணன்கோவில் கல்லூரிகளில் கிறிஸ்துமஸ் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி சுற்றுலா மற்றும் உணவக நிர்வாகவியல்துறை சார்பில் நடைபெற்ற விழாவுக்கு தாளாளர் ஏ.பி.செல்வராஜன் தலைமை வகித்தார். கல்லூரி வளாகத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாணவி கே.சோபனா கிறஸ்துமஸ் கீதங்களை பாடினார்.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர் , மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர்கள் பெ.கி.பாமுருகன், ரா.முத்துலட்சுமி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். கல்வி நிறுவன வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனத் தலைவர் வி.பி.எம்.சங்கர் தலைமை வகித்தார். தாளாளர் பழனிச்செல்வி, இயக்குநர் டாக்டர் ரா.சபரிமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி தாளாளர் பழனிச்செல்வி கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அனைத்து மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துறைத்தலைவர்கள், பேராசிரியைகள் மற்றும் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் செந்தாமரைலட்சுமி வரவேற்றார். ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநர் ரா.சபரிமாலா செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








