மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

வரத்து கால்வாயில் ரயில்வே சுரங்க பாதை அமைக்கக் கிராம மக்கள் எதிர்ப்பு

திருச்சுழி அருகே கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் கால்வாயை மறித்து ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதை தடை செய்ய

Updated On :25 டிசம்பர் 2018, 6:40 am IST

திருச்சுழி அருகே கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் கால்வாயை மறித்து ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதை தடை செய்ய வேண்டும் என எம். புளியங்குளம் கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானத்திடம் மனு அளித்தனர்.
 அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் மிதலைக்குளம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் எம். புளியங்குளம் கிராமம் வழியாக விருதுநகர் மானாமதுரை செல்லும் ரயில்வே பாதை உள்ளது. இப்பகுதியில், கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வரத்து கால்வாயை அடைத்து ரயில்வே சார்பில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், கண்மாய்க்கு தண்ணீர் வரத்து பாதிக் கப்படும். 
எனவே, ஏற்கெனவே உள்ள சாலை அருகே சுரங்கப் பாதை அமைக்க வேண்டும். மேலும் கிராமத்துக்குச் செல்லும் பாதையில் தரைப்பாலம் அமைக்க வேண்டும். அதேபோல், எங்கள் கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக வறட்சி நிலவி வருவதால் நூறு நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும். மேலும், தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்குவதுடன், தெருவிளக் குகளை சீரமைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.