விருதுநகர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆரின் 31ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை பல்வேறு கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது.
சாத்தூரில் அதிமுக நகர கழகம் மற்றும் கிழக்கு,மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் நகரசெயலாளர் வாசன், மாநில பொதுகுழு உறுப்பினர் வேலாயுதம், கிழக்கு ஒன்றியச் செயலாளர் சண்முககனி ஆகியோர் முக்குராந்தல் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அமமுக சார்பில் அதன் நகரச் செயலாளர் ஜி.ஆர்.முருகன், அமைப்பு சாரா ஓட்டுநரணி துணைச் செயலாளர் இளங்கோவன், ஒன்றியச் செயலாளர் தாமோதரன், மாவட்ட மாணவரணி செயலாளர் முனீஸ்வரன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக வினர் தேரடி திடலில் இருந்து தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா தலைமையில் அமைதி ஊர்வலமாக பேருந்து நிலையம் வந்தனர்.
அங்குள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் த.முத்தையா, மாநில மகளிர் அணி நிர்வாகி சக்திகோதண்டம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் நகரச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.மயில்சாமி, பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ப.அங்குராஜ், டி.வி.கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் திங்கள்கிழமை எம்.ஜி.ஆர் உருவ படம் தாங்கிய வாகனம் முன் செல்ல அதிமுகவினர் அமைதி பேரணி நடத்தினர். பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணா சிலையில் இருந்து தொடங்கிய பேரணி காந்திசிலை, தெற்கு காவல் நிலையம், எல்.ஐ.சி அலுவலகம், காந்தி கலை மன்றம், ஜவஹர் மைதானம், சங்கரன் கோயில் முக்கு வழியாக வந்து சத்திரப்பட்டி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை முன் நிறைவடைந்தது. அங்கு அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அப்பா... மகனே...

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடம்..! நியூசிலாந்து வீரரின் சாதனை!
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க சுங்கக் கட்டணம் இல்லை! ஈரான் உறுதி அளித்ததாக டிரம்ப் பதிவு!

வேளச்சேரி - தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் ஏன்?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


