அருப்புக்கோட்டையில் இஸ்கான் அமைப்பினர் சார்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் ஜெகந்நாதர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அருப்புக்கோட்டை ஸ்ரீஆயிரங்கண் மாரியம்மன் கோயில் வளாகம் முன் தொடங்கிய இத்தேரோட்ட நிகழ்ச்சிக்கு இஸ்கான் அமைப்பின் குருஜி ஜெயபதாக ஸ்வாமி தலைமை வகித்தார்.தேரோட்ட நிகழ்ச்சியின் தொடக்கமாக பக்தி ஆஸ்ரேய வைஷ்ணவா, சுக தேவா, பக்தி வினோத் ஸ்வாமி, பானு ஸ்வாமி ஆகியோரின் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தொழிலதிபர் டி.ஆர்.தினகரன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார்.
விருதுநகர் சாலை, பெரிய கடை வீதி, ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரர் கோயில் பகுதி, திருச்சுழி சாலை, வடக்கு ரத வீதி வழியாகச் சென்று தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் முன் தேரோட்டம் நிறைவடைந்தது. பின்னர் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட மேடையில் சிறப்பு சங்கீர்த்தனமும், குசேலர் எனும் ஆன்மிக நாடகமும், ஜெகந்நாதர் லீலை பற்றிய ஆன்மிகச் சொற்பொழிவும் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை இஸ்கான் கிளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநிலங்களவை எம்.பி.யாக நிதின் நபின் உள்பட 16 போ் பதவியேற்பு

கல்பாக்கம் முன்மாதிரி வேக ஈனுலை ‘மைல்கல்’: சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும்:கோபிநாத் பழனியப்பன்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

