மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஸ்ரீவிலி. தோமா ஆலயத்தில் புனித வியாழன் சிறப்பு ஆராதனை

ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் புனித வியாழக்கிழமை சிறப்பு ஆராதனை, திருவிருந்து ஆராதனையாக நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 9:14 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் புனித வியாழக்கிழமை சிறப்பு ஆராதனை, திருவிருந்து ஆராதனையாக நடைபெற்றது.
      இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது சீஷர்களுடன் கடைசி ராபோஜன பந்தியில் கலந்துகொண்டார். அப்போது, சீடர்களின் கால்களைக் கழுவி, தாழ்மையின் முன்மாதிரியைக் கற்றுக் கொடுத்தார்.
     இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூருவதற்காகவும், அவரது உயிர்த்தெழுதலை அறிக்கை இடுவதற்காகவும், அவரது வருகைக்கு ஆயத்தமாவதைக் குறிப்பதற்காகவும், இந்த புனித வியாழனன்று உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ராபோஜன பந்தி மற்றும் திருவிருந்து ஆராதனை அனுசரிக்கப்படும்.
      இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் புனித வியாழன் திரு விருந்து ஆராதனை, சபைகுரு ஜே. ஜான் கமலேசன் தலைமையில் நடைபெற்றது.
சபையின் உபதேசியார் பி.டி. எபனேசர் செல்லராஜா வேதபாடம் வாசித்தார். பாடகர் குழுவினர் சிறப்பு பாடல்களைப் பாடினர். 
     திருமண்டலத்தின் மூத்த போதகர் டி. சைமன் முத்துச்சாமி தேவ செய்தி அளித்து திருவிருந்து ஆராதனையை நடத்தினார். இதில், ஏராளமான திருச்சபை மக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.