டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

ஆனைக்குளம் கண்மாய் பகுதியில் சோலார் பேனலை' அகற்றக் கோரிக்கை

திருச்சுழி அருகே ஆனைக்குளம் கண்மாய் நீர்பிடிப்பு பகுதி மற்றும் வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சூரிய

Updated On :21 மே 2018, 6:27 pm

திருச்சுழி அருகே ஆனைக்குளம் கண்மாய் நீர்பிடிப்பு பகுதி மற்றும் வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளிமின்சாரத் தகட்டை (சோலார் பேனல்) அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானத்திடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: திருச்சுழி வட்டத்தில் உள்ள ஆனைக்குளம் கண்மாய் மூலம் 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், இக்கண்மாய்க்கு திருச்சுழி குண்டாற்றிலிருந்து கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தற்போது, இந்த கால்வாய் அமைந்துள்ள சேதுபுரம் அருகே 100 ஏக்கரில் சூரியஒளி மின்சாரத் தகடு திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இது கண்மாய் நீர்பிடிப்பு பகுதி மற்றும் உள்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டுள்ளதால் நீர்வரத்தின்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பலர் வெளியூர்களுக்கு பிழைப்பு தேடி செல்கின்றனர். எனவே, வரத்து கால்வாய் மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சூரியஒளி மின்சாரத் தகட்டை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.