மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

திருச்சுழியில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் கழிவுநீர்க் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On :21 மே 2018, 6:57 pm

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் கழிவுநீர்க் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சுழியில் நடுத்தெரு,மேலத்தெரு, பசுமடத்தெரு, தலையாரி சந்து, ரமண மகரிஷி ஆலயத் தெரு உள்ளிட்ட பல தெருக்கள் மேடான பகுதியில் உள்ளன. இத்தெருக்களில் கழிவுநீர்க் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் முறையான பராமரிப்பின்றி உள்ளன. இதில் குப்பைகளும் மண்ணும் சேர்ந்து அடைத்துக் கொண்டுள்ளன. இதனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி வீடுகளின் உள்ளே புகுந்துவிடுவதால் துர்நாற்றத்துடன் சுகாதாரக்கேடு ஏற்பட்டு அவதிப்படுவதாக அப்பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே இப் பகுதியில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் கழிவுநீர்க்கால்வாய்களைத் தூர்வாரி உரிய பராமரிப்பு செய்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.