குப்பாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் உயர் தொழில்நுட்ப வகுப்பறை தொடக்கம்
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், குப்பாம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய தொடுதிரை
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், குப்பாம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய தொடுதிரை உயர் தொழில்நுட்ப வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியாக 1835 ஆம் ஆண்டு இப்பள்ளி தொடங்கப்பட்டது. பின்னர் சிறப்பான கல்வி சேவையின் காரணமாக 2009 ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் 130 மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். கற்றல் திறனை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தொடுதிரை வசதியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப வகுப்பறையை ஆசிரியர் பங்களிப்பு ரூ.70 ஆயிரம், பொதுமக்களின் பங்களிப்பாக ரூ.70 ஆயிரம் என மொத்தம் ரூ.1.40 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பள்ளியின் சுற்றுச்சூழல், கற்றல் திறன், புதுமையான கற்பித்தல் முறை ஆகிய கல்வி செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், நிகழாண்டு இப்பள்ளிக்கு தமிழக அரசின் புதுமைப் பள்ளிக்கான விருதினை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப வகுப்பறையை புதுமைப் பள்ளி விருதுக்கான தொகை ரூ.1 லட்சத்துடன் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு ரூ.70 ஆயிரம் என மொத்தம் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளியில் 2 தொலைக்காட்சிகளும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் பொதுமக்கள் பங்களிப்புடன் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், விருதுநகர் மாவட்டக்கல்வி அலுவலர் சீனிவாசன், தலைமை ஆசிரியர் ஸ்ரீராம், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






