/

பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள்

ராஜபாளையத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் தமிழ் வழியில் பயிலும் 100 மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம்

Updated On :24 ஜனவரி 2019, 12:53 am IST

ராஜபாளையத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் தமிழ் வழியில் பயிலும் 100 மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் செவ்வாய்க்கிழமை இலவசமாக வழங்கப்பட்டது.
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில், தனியார் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு இலவசமாக புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் 3 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், தமிழ் வழியில் பயிலும் 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை தேர்வு செய்தனர். மாணவர்களால் தேர்வு செய்யப்பட்ட ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் அறக்கட்டளை சார்பில் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
     பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் எழுதிய "மூளைக்குள் சுற்றுலா' என்ற புத்தகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.