பிரதமர் மோடியின் சமீபத்திய பெங்களூரு வருகையின் போது ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் 45வது ஆண்டு விழா மே 10ஆம் தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அவரின் பாதுகாப்பு வாகனப் பேரணி செல்லும் பாதையில் இருந்து இரண்டு ஜெலட்டின் குச்சிகள் கண்டறியப்பட்டன.
பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவலர் ஒருவர் இதனைக் கவனித்தார். இதுகுறித்து கக்கலிபுரா காவல் நிலையத்தில் வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தேசிய புலனாய்வு முகமையும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் கடமை தவறியதாக பெங்களூரு தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 காவலர்கள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்த உள் துறை விசாரணைக்குப் பிறகு, பெங்களூரு தெற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாஸ் கௌடா இந்த பணியிடை நீக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சாத்தனூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவல் உதவி ஆய்வாளர், கக்கலிபுரா காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மேலும் நான்கு காவலர்கள் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Summary
Six policemen have been suspended on charges of dereliction of duty following the recovery of gelatin sticks ahead of Prime Minister Narendra Modi's visit to the Art of Living Centre on the outskirts of the city on May 10.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
புகாரளிக்க வந்த பெண் அலைக்கழிப்பு: காவல் ஆய்வாளா்கள் உள்பட 5 போ் பணியிடை நீக்கம்

ரூ. 200 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



