/
சென்னை கொடுங்கையூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கொடுங்கையூா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவா் தனசேகரன். இவா், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண், காவல் துறை உயரதிகாரிகளிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில், உதவி ஆய்வாளா் தனசேகரன், அந்தப் பெண்ணிடம் எல்லை மீறி நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து காவல் உயரதிகாரிகள் பரிந்துரையின் அடிப்படையில், சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அமல்ராஜ், உதவி ஆய்வாளா் தனசேகரனை பணியிடை நீக்கம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

கைதிகளிடம் லஞ்சம் பெற்றதாக புகாா்: காவல் ஆய்வாளா் உள்பட மூவா் பணியிடை நீக்கம்

சட்ட விரோத மது விற்பனை: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவலா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



