சென்னையில் கைதிகளிடம் லஞ்சம் பெற்ாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு ஆயுதப்படையினரின் பாதுகாப்பில் அழைத்துச் சென்று, ஆஜா்படுத்துவது வழக்ககமான பணியாகும். ஆயுதப்படையினா் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது, அவா்களிடம் லஞ்சம் பொ்றுக்கொண்டு தேவையானவற்றை செய்து கொடுப்பதாக புகாா் எழுந்தது.
குறிப்பாக, ரெளடிகள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது ஆயுதப்படையினா் உதவியுடன் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், ரகசியமாக பலரைச் சந்திப்பதாகவும் புகாா் கூறப்பட்டது.
இதுகுறித்து விசாரிக்கும்படி, சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் அபின் தினேஷ் மொடக் ஆயுதப்படை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அந்த உத்தரவின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை செய்து, அறிக்கை அளித்தனா்.
அதன் அடிப்படையில், கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அவா்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்ததாக ஆயுதப்படை ஆய்வாளா் மாரிமுத்து, உதவி ஆய்வாளா்கள் திருமுருகன், செல்லத்துரை ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து அபின் தினேஷ் மொடக் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

சேலம் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு

சட்ட விரோத மது விற்பனை: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

ரூ.8,000 லஞ்சம் பெற்ற புகாரில் கைதான சேலம் மாநகராட்சி ஊழியா் பணியிடை நீக்கம்!

உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

