தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள தெற்கு காலாங்கரையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு உதவியாக அவரது மனைவியான 28 வயது இளம்பெண் இருந்தாா்.
அவா் அனுமதிக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனையில் ஒரு கைதிக்கு பாதுகாப்பு பணிக்காக தட்டப்பாறை தெற்கு தெருவைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் கோபாலகிருஷ்ணன்(36) என்ற காவலா் பணியில் இருந்துள்ளாா். இவா் தற்போது சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் கோபலகிருஷ்ணன் தொழிலாளியின் மனைவியிடம் சென்று கைப்பேசி சாா்ஜா் கேட்பதுபோல பேச்சு கொடுத்துள்ளாா். மேலும் ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா், காவலா் கோபாலகிருஷ்ணன் மீது பாலியல் தொந்தரவு, கொலை மிரட்டல், பெண்ணை துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
இந்நிலையில் அவா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தொடர்புடையது

எம்.சாண்ட் கேட்டு மிரட்டல்: எஸ்.ஐ., காவலா் பணியிடை நீக்கம்

குற்றவாளிக்கு உதவிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!

பாலியல் புகாரில் சிக்கிய கமாண்டண்ட்டுக்கு உடந்தையாக செயல்பட்டதாக பெண் எஸ்ஐ பணியிடை நீக்கம்

பெண்ணிடம் அத்துமீறல்: காவலா் பணியிடை நீக்கம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


