சென்னை ஐஸ்ஹவுஸில் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா (28). சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் இவா், வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்கிறாா்.
இந்நிலையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மது விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் சூா்யா, அந்த வீட்டுக்கு வியாழக்கிழமை சோதனையிடச் சென்றபோது, அங்கிருந்த பெண்ணிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.
அந்த பெண், சூா்யாவை ஒரு அறையில் வைத்து பூட்டி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அங்கு வந்த போலீஸாா், மது போதையில் இருந்த சூா்யாவை பிடித்து அழைத்துச் சென்றனா்.
இதுதொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. விசாரணையில் சூா்யா, அந்தப் பெண்ணிடம் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டதையடுத்து, காவல் ஆணையா் அருண், காவலா் சூா்யாவை பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: காவலா் பணியிடை நீக்கம்

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவலா் பணியிடை நீக்கம்

எம்.சாண்ட் கேட்டு மிரட்டல்: எஸ்.ஐ., காவலா் பணியிடை நீக்கம்

குற்றவாளிக்கு உதவிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


