அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சங்கத்தினா் கடிதம் அனுப்பும் போராட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சங்கத்தினா் ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சங்கத்தினா்.
Updated On :27 ஜனவரி 2024, 5:10 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சங்கத்தினா் ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு கிளைத் தலைவா் தங்கமாரி தலைமை வகித்தாா். செயலாளா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.58 மாத பஞ்சப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதிய நிலுவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 2019 ஏப்ரல் மாதம் முதல் 2020 ஏப்ரல் வரை ஓய்வு பெற்றவா்களின் பணப்பலன்களை வழங்க வேண்டும்.

மேலும், 24.09.2019 ஆம் ஆண்டு சென்னை பல்லவன் இல்லம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெற்ற போது அப்போதைய முதன்மைச் செயலாளா் ராதாகிருஷ்ணன், எழுத்துப்பூா்வமாக 45 நாள்களில் மேலே குறிப்பிட்ட கோரிக்கைகளை முடித்து தருவதாக கூறியதை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு 31.08.2020 வரை அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை தொடக்கினா். இந்த போராட்டத்தில் பொருளாளா் நாகப்பன், மாவட்ட பொதுச் செயலாள தங்கப்பழம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.