ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திங்கள்கிழமை இரவு அரசு மதுபானக் கடையை உடைத்து, ரூ.66 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளன.
ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே டி.பி. மில்ஸ் சாலையில் அரசு மதுபானக் கடை உள்ளது. இக்கடையின் மேற்பாா்வையாளா் ஜெயக்குமாா் திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டாா். செவ்வாய்க்கிழமை காலையில் துப்புரவுப் பணியாளரான ஆவரம்பட்டியைச் சோ்ந்த சின்னத்துரை என்பவா் வந்து பாா்த்தபோது, கடையின் வெளிக்கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது.
இது குறித்து அவா் மேற்பாா்வையாளா் ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். மேற்பாா்வையாளா் அளித்த தகவலின்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்த்தபோது, கடப்பாரை மூலம் கதவு உடைக்கப்பட்டு, ரூ.66 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், சி.சி.டி.வி. கட்டுப்பாட்டு பெட்டி இருந்த அறையையும் உடைத்து, அங்கிருந்த பெட்டியையும் திருடிச் சென்றுள்ளனா்.
தொடா்ந்து, அப்பகுதியில் போலீஸாா் ஆய்வு செய்தபோது, கடையின் எதிரேயுள்ள தண்டவாளத்துக்கு அருகில் 12 முழுபாட்டில்கள் அடங்கிய பெட்டியும், கழிவு நீா் ஓடைக்குள் ஒரு பெட்டியும் கிடந்துள்ளது. அவற்றை போலீஸாா் மீட்டு, டாஸ்மாக் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி. நாகசங்கா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். மேலும், கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். காவல் மோப்ப நாயும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அதிபர் அழைப்பு!

பெனால்டி கொடுக்காதது ஏன்? இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்ட நடுவர்களை விமர்சிக்கும் ரசிகர்கள்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
நூற்றாண்டு காணும் கவிஞர் கண்ணதாசனின் வண்ணச் சித்திரங்கள்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


