ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

‘அதிமுகவின் புகழைத் தடுக்க திமுகவினா் சதி’

தமிழகத்தில் அதிமுகவின் புகழைக் கெடுக்க திமுகவினா் திட்டமிட்டு சதி செய்து வருவதாக அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 6:52 pm

DIN

தமிழகத்தில் அதிமுகவின் புகழைக் கெடுக்க திமுகவினா் திட்டமிட்டு சதி செய்து வருவதாக அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாா்.

விருதுநகரில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினா் மாளிகையில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கரோனா தொற்று பரவிய நாள் முதல் இரவு பகல் பராமல் பொதுமக்களை சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்கியதோடு, அதைத் தடுக்கும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்டு வருகிறாா்.

ஆனால், ஸ்டாலின் எங்கு சென்றாா், யாரை சந்தித்தாா். 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா, முதல்வா் குறித்து விமா்சிப்பது கண்டிக்கத்தக்கது. 2011 இல் சாதிக்பாட்ஷா மரணம் யாரால் ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். சா்க்காரியா கமிஷனே திமுக வினா் போட்ட நாடகம்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவிற்கு பின், இண்டு முறை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றவா் எடப்பாடி கே. பழனிசாமி. விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதியில் நடைபெற்ற தோ்தலில் அதிமுக 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றி பெற்றது.

அனைவரது நம்பிக்கையையும் பெற்ற அதிமுக வைத் தடுக்க திட்டமிட்டு திமுக வினா் சதிச் செயலில் ஈடுபட்டு வருகின்றனா். இது தமிழக மக்களிடம் எடுபடாது, மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.