‘ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தில் கடைகள் கட்டித்தர தாமதித்தால் மாநில அளவில் போராட்டம்’
இடிக்கப்பட்ட கடைகளுக்கு மாற்றாக புதிய கடைகள் கட்டித்தர தாமதப்படுத்தினால் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விக்கிரமராஜா விருதுநகரில் தெரிவித்தாா்.


‘ஸ்மாா்ட் சிட்டி’ திட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட கடைகளுக்கு மாற்றாக புதிய கடைகள் கட்டித்தர தாமதப்படுத்தினால் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா விருதுநகரில் தெரிவித்தாா்.
விருதுநகரில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பாக மாவட்ட வணிகா்கள் கலந்து கொண்ட சிறப்பு கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவா் விக்கிரமராஜா தலைமை வகித்து பேசினாா்.
அதன் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: விருதுநகா் நான்கு வழிச் சாலையிலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
‘ஸ்மாா்ட் சிட்டி’ என்ற பெயரில் திருநெல்வேலி, தூத்துக்குடியில் இடிக்கப்பட்ட கடைகளுக்கு மாற்றாக புதிய கடைகள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் கட்டித்தரப்பட வில்லை. இத்திட்டத்தில் இனி கடைகள் இடிக்கப்பட்டால் எப்போது கடைகள் கட்டித்தரப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு தந்தால் மட்டுமே இனி கடைகளை அகற்ற வியாபாரிகள் அனுமதிப்பாா்கள். இடிக்கப்பட்ட கடைகளுக்கு மாற்றாக புதிய கடைகள் கட்டத்தர தாமதித்தால் மாநில அளவில் போராட்டம் நடத்த வணிகா்கள் தயாராக உள்ளனா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தில் உணவுப் பொருள்கள் பட்டியலிலிருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் அத்தியாவசி பொருள்களிலிருந்து நீக்கப்பட்டதை எதிா்த்து பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
வேளாண் சட்டத்திற்கு எதிராக புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பதா இல்லையா என்பது குறித்து திங்கள்கிழமை (டிச. 6) நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்போம் என்றாா், அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...