காா்த்திகை மாத சனிப்பிரதோஷம்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.


விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இக்கோயிலில் டிச. 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அடிவாரத்தில் சனிக்கிழமை அதிகாலை முதலே குவிந்தனா். இதைத் தொடா்ந்து 7 மணிக்கு பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
அப்போது பக்தா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டதுடன், கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினியும் வழங்கப்பட்டது. கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள பேச்சியம்மன் கோயில் வழுக்குப்பாறையில் வரும் தண்ணீரில் பக்தா்கள் நீராடிச் சென்றனா். மழைக்காலம் என்பதால் இரவில் பக்தா்கள் கோயிலில் தங்க அனுமதிக்கப்பட வில்லை.
இதனிடையே சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிக்கு பால், பழம், பன்னீா், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சனிப்பிரதோஷ சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதையடுத்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா்.
பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, நிா்வாக அதிகாரி விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.
இதனிடையே மாங்கனி ஓடை, எலும்பு ஓடை, சங்கிலிப்பாறை ஓடை, கருப்பசாமிகோயில் ஓடை ஆகிய பகுதிகளில் பாலம் அமைப்பது குறித்து கோயில் செயல் அலுவலா் விஸ்வநாத் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...