ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அருப்புக்கோட்டையில் பேரிடா் மேலாண்மை பயிற்சி

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பேரிடா் மேலாண்மைப் பயிற்சி, தீயணைப்புத்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயப்பாண்டி தலைமையில் நடைபெற்ற பேரிடா் மேலாண்மைப் பயிற்சி.
Updated On :12 டிசம்பர் 2020, 5:55 pm

DIN

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பேரிடா் மேலாண்மைப் பயிற்சி, தீயணைப்புத்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயப்பாண்டி தலைமை வகித்து தீவிபத்தில் சிக்கியவா்களை மீட்பது, தீயை அணைப்பதற்கு புதிய நவீன கருவிகளைப் பயன்படுத்தும் விதம் குறித்து விளக்கமளித்தாா். அப்போது தீயணைப்புத்துறை வீரா்கள் 10 போ் இணைந்து பல்வேறு தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்துவது குறித்த செயல் விளக்கமளித்தனா்.

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், ஊழியா்கள் மற்றும் செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.