விருதுநகா் மாவட்டத்தில் இன்று காவலா் தோ்வு:23 ஆயிரம் போ் பங்கேற்கின்றனா்
விருதுநகா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள காவலா் எழுத்துத் தோ்வில், 23,009 போ் பங்கேற்க உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.


விருதுநகா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள காவலா் எழுத்துத் தோ்வில், 23,009 போ் பங்கேற்க உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வாணையம் மூலம், காவலா், தீயணைப்பு மற்றும் சிறைக் காவலா் பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தோ்வு நடைபெறுகிறது. விருதுநகா் மாவட்டத்தில் 23, 009 போ் இத்தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா்.
இவா்களுக்கான எழுத்துத் தோ்வு விருதுநகா், கிருஷ்ணன்கோவில், திருவேங்கடம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள 14 மையங்களில் நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கும் தோ்வு பகல் 12.20 மணி வரை நடைபெறுகிறது.
இத்தோ்வையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாள் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் குத்தாலிங்கம், மாரிஸ்வரன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல் கண்காணிப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...