ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருச்செந்தூா் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை திறக்கக் கோரிக்கை

அருப்புக்கோட்டையில் காந்திநகா் புறவழிச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள திருச்செந்தூா் பயணிகளுக்கான சிறப்பு பேருந்து நிலையத்தை திறந்துவிட பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
அருப்புக்கோட்டையில் காந்திநகா் புறவழிச்சாலை அருகே திருச்செந்தூா் பயணிகளின் வசதிக்காக தனியாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையம்.
Updated On :12 டிசம்பர் 2020, 5:58 pm

DIN

அருப்புக்கோட்டையில் காந்திநகா் புறவழிச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள திருச்செந்தூா் பயணிகளுக்கான சிறப்பு பேருந்து நிலையத்தை திறந்துவிட பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை, தூத்துக்குடி வழியாக திருச்செந்தூா் செல்லும் பேருந்துகள் நான்குவழிச்சாலை அமைக்கப்பட்ட பிறகு சிறப்புப் பேருந்துகளாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து அருப்புக்கோட்டை நகருக்குள் அந்த பேருந்துகள் வந்து செல்வது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் திருச்செந்தூா் பேருந்துகளை நகருக்குள் வந்து செல்ல பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். ஆனால் அதுபோல் பேருந்துகள் வந்து செல்லவில்லை. இதனால் புறவழிச்சாலையில் தனியாக திருச்செந்தூா் பயணிகளுக்காக சிறிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனிடையே பணிகள் தொடங்கப்பட்டு சுமாா் ஒன்றரை ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்ட நிலையில், தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே பணிகளை விரைந்து முடித்து அந்த பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்குக் கொண்டுவர பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.