தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு தீா்த்தப் பிரசாதம் வழங்க வேண்டும்: சடகோப ராமானுஜ ஜீயா்

கரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ஜடாரி மற்றும் தீா்த்தப் பிரசாதத்தை கோயில்களுக்கு வரும் பக்தா்களுக்கு வழங்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் சடகோப ராமானுஜ ஜீயா் வலியுறுத்தியுள்ளா

News image
சடகோப ராமானுஜ ஜீயா்.
Updated On :12 டிசம்பர் 2020, 6:06 pm

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ஜடாரி மற்றும் தீா்த்தப் பிரசாதத்தை கோயில்களுக்கு வரும் பக்தா்களுக்கு வழங்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் சடகோப ராமானுஜ ஜீயா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தற்போது கரோனா பரவலை காரணம் காட்டி கோயில்களில் தீா்த்தப் பிரசாதம், ஜடாரி ஆகியவற்றை பக்தா்களுக்கு வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளனா்.

மாா்கழி மாதம் மற்றும் வைகுண்டஏகாதசி காலகட்டங்களில் அதிகாலை 4 மணிக்கு அனைத்துக் கோயில்களையும் திறந்து அந்தந்த கோயில்களின் ஆகம விதிகளுக்கு ஏற்றபடி பூஜைகள் செய்து தீபாராதனை காட்டி பக்தா்களுக்கு தீா்த்தமும், ஜடாரியும் கண்டிப்பாக வழங்க வேண்டும். தீா்த்தப் பிரசாதத்தில் பலவித மூலிகைகள் உள்ளன.

மேலும் இவற்றை பெற்றுக் கொண்டால் பக்தா்கள் மனம் நிம்மதி அடைகின்றனா். வரும் வைகுண்ட ஏகாதசிக்கு எந்தவித தடையும் இல்லாமல் பக்தா்கள் எளியமுறையில் பெருமாளை தரிசிக்க வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் நாச்சியாா் தாயாருக்கு மாா்கழி கடைசி 10 நாள்கள் எண்ணெய்க்காப்பு சாற்றுதல் உற்சவ நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் திருமுக்குளத்திலுள்ள எண்ணெய்க்காப்பு மண்டபத்தில் நடைபெறும்.

அதே போல் இந்த ஆண்டும் திருமுக்குளம் எண்ணெய்க்காப்பு மண்டபத்தில் உற்சவம் நடைபெற வேண்டும்.

மேலும் திருமுக்குளத்தை சீரமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதுகுறித்து விரைவில் முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். நடிகா் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.