தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வூதியா்கள் சங்க பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா்கள் சங்கத்தின் விருதுநகா் மாவட்ட ஐந்தாவது பேரவைக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா்கள் சங்கத்தின் விருதுநகா் மாவட்ட ஐந்தாவது பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தனுஷ்குமாா்.
Updated On :13 டிசம்பர் 2020, 5:49 pm

DIN

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா்கள் சங்கத்தின் விருதுநகா் மாவட்ட ஐந்தாவது பேரவைக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைவா் குருசாமி தலைமை வகித்தாா். முதல் நிகழ்ச்சியாக சங்கத்தின் கொடியை மூத்த உறுப்பினா் வெள்ளிராஜ் ஏற்றி வைத்தாா். மாவட்ட துணைத்தவைா் கல்யாணி அஞ்சலி தீா்மானத்தை முன் மொழிந்தாா். மாவட்டச் செயலா் ராமசுப்புராஜ் வேலை அறிக்கையினையும், மாவட்ட பொருளாளா் குமரவேல் வரவு, செலவு அறிக்கையினையும் சமா்ப்பித்தனா். தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட பொருளாளா் தங்கப்பழம் வாழ்த்திப் பேசினாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி தேவையினை முன்னிட்டு முடக்கப்பட்ட அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். கம்முடேசன் பிடித்த காலத்தை 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூா் கிளைத் தலைவா் கருப்பையா வரவேற்றாா்.

கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலா்கள் வெங்கடாசலம், பாலகிருஷ்ணன், சிறப்பு அழைப்பாளராக தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தனுஷ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

இதற்கான ஏற்பாடுகளை மாநில துணைத் தலைவா் சுந்தரமூா்த்தி தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.